Saturday 13 June 2020

நாம் மத்யமர்..!..(8.1.2020)


மத்யமரில் இணைந்த பின்  பல ஊர்களிலிருந்தும் புதிய நண்பர்கள்! மும்பை மத்யமர்கள் விஜி கண்ணன், மோகனா ஐயர், சுந்தரி ஹரன் மூவரும்..மும்பை வரும்போது தெரியப் படுத்துங்கள். நாம் சந்திப்போம்..என்றனர். ஜனவர் 3 எனக்கு ஒரு ஃபங்ஷன் இருந்ததால் மும்பை வருவதாக சொன்னேன்.

சுந்தரி ஹரன் வெளியூர் செல்வதால் சந்திக்க முடியாதே என்று மிக வருந்தினார். நாங்கள் மூவரும் சந்திக்க முடிவு செய்தோம்.

நான் தங்கியிருந்தது என் தம்பி வீட்டில் Tardeoவில். விழா நடந்தது பாண்ட்ராவில். மோகனா  இருப்பது நவிமும்பை வாஷி. விஜி தானே. நான் இருந்தது இரண்டே நாள். ஆனாலும் எப்படியும் சந்தித்து விடும் ஆவல்!

விழா முடிந்து நான் தானேயில் என் அத்தை பெண் வீட்டிற்கு வருவதாயும் அங்கு வரமுடியுமா என்றபோது இருவரும் double ok சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது.

நான் தானே சென்று விலாசம் அனுப்பியதும் இருவரும் மாலை நான்கு மணிக்கு ஆஜர்!மோகனாவை 15 வருடங்களுக்கு முன்பு Vashi Fine Artsல் சந்தித்தது. அங்கு நடக்கும் இசை நடன நாடகங்களுக்கு  நான் தவறாமல் ஆஜராகி விடுவேன்! இப்பொழுது மோகனாதான் அந்த கிளப்பின் காரியதரிசி.

விஜி முலுந்த் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிவதுடன், Ph.D செய்து கொண்டிருக்கிறார். மத்யமர் மூலம் அறிமுகமான எங்களுக்கு பலநாள் பழகியது போன்ற உணர்வு.

இடையில் என் அத்தங்கா கொடுத்த ஸ்வீட் காரம் காஃபியுடன், சுவாரசியமான எங்கள் பேச்சில் என் அத்தங்கா, அவள் கணவருடன் என் கணவரும் இணைந்து கொள்ள கலகலப்பும் சிரிப்புமாக இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

அதன்பின் photo session! சந்தித்த சந்தோஷத்தை அவ்வப்போது பார்த்து மகிழ சில snaps! பிரிய மனமின்றி என் அத்தங்கா கொடுத்த தாம்பூலத்துடன் மோகனாவும் விஜியும் கிளம்பிச் சென்றனர்.

மூன்று பேர் இணைந்தபோதே இத்தனை மகிழ்ச்சி என்கிறபோது பல நூறு பேர் சேரும் மத்யமர் மீட்டின்போது ஏற்படும் சந்தோஷத்துக்கு இணை ஏது? என்னால் மீட்டுக்கு வர முடியாததை நினைத்து வருத்தம்தான். எப்படியும் அடுத்து வரும் மீட்டில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.







No comments:

Post a Comment