Wednesday, 10 June 2020

மார்கழி சிறப்பு🙏..(11.1.2020)

மார்கழி சிறப்பு🙏
மார்கழியில் மட்டுமே விடிகாலை எழுந்து ஆலயம் செல்வதும், திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பாசுரங்களைப் படிப்பதும் ஏன்?

பாவை நோன்பு 2000  ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில்  ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயினி தேவியை வணங்கித் துதித்து  தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.   பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலா
யிற்று. அதே முறையில் ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். 

பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை  உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம்  செலுத்தாமல் இறைவனிடம் மட்டுமே மனதினைச் செலுத்தி நோன்பினை  மேற்கொள்ள
வேண்டும் என்பதைத் திருப்பாவையில் கூறுகிறாள் ஆண்டாள்.

கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்கவும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதம் மேற்கொள்ள வேண்டும்.

26 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடித்து 27ம் நாள்  முடித்து வேண்டியதைப் பெற  கூடாரவல்லி அன்று அந்த கோவிந்தனைச் சரணடைகிறாள் கோதைபிராட்டி! கூடாரவல்லி மகிமை நாளை..

திருப்பாவை..26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி..6
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

#இன்றையகோலம்
தீபமங்கள ஜோதி🔥
#நிவேதனம்
சாமை காராமணிப் பொங்கல்..இஞ்சி சட்னி






No comments:

Post a Comment