Thursday 14 May 2020

Sunday topic வாவா வசந்தமே..11.4.2020


கரோனாவால் நான் மிகவும் மிஸ் பண்ணுவது என் பேரன் பேத்திகளின் வருகையும் அவர்களுடன் சந்தோஷிக்கும் நேரங்களையும். விடுமுறை ஆரம்பித்ததும் சென்னை ஹைதராபாதிலிருக்கும் என் மகன் மகள் வயிற்று பேரன் பேத்திகள் வந்து விட ஒரே ஆட்டம்..பாட்டம்..
கொண்டாட்டம்தான்!

காலை மெதுவாக எழுந்து... நிதானமாகக் குளித்து...ரசித்து ருசித்து சாப்பிட்டு...என் ஏழு வயதாகும் சின்ன பேத்தி  ப்ரியங்கா எங்கள் வீட்டுக்கு வந்தால் தானாக சாப்பிட மாட்டாள். தாத்தாதான் ஊட்ட வேண்டும். கையில் மொபைலில் விளையாட்டுடன் எவ்வளவு சாப்பிட்டோம் என்பதே தெரியாமல் சாப்பிடுவாள். அதோடு பிஸ்கட் கொண்டா பாட்டி..ஸுப் பண்ணினயா?...தாத்தா..இன்னிக்கு ஐஸ்க்ரீம் வாங்கலாம் வா...என்று ஒரே குஷியாகப் பொழுது போவதே தெரியாமல் ஓடிவிடும்.

தாத்தாவுடன் நொண்டி விளையாட்டு, யானை ஏற்றம் என்று விளையாடுவாள்! எனக்கு பாத்திரம் தேய்க்க உதவி செய்வாள்! அம்மா அப்பா பற்றி நினைக்கவே மாட்டாள்.

என் பெண் வயிற்று பேத்தி ஸாய்லி எப்பவும் விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு Fashion Parade செய்வாள். டேன்ஸ் ஆடுவாள்!

இதோடு அவ்வப்போது சண்டை அமளிதுமளிப்படும். அவர்களை சமாதானம் செய்வதற்குள் போதும் என்றாகி விடும்! அரைமணி கழித்து பார்த்தால் அப்படி ஒரு ஒற்றுமை! இவர்களா அடித்துக் கொண்டார்கள் என்றிருக்கும்! என் பெரிய பேரன் பேத்திகளிடம் கேட்டால்..அதெல்லாம் ஒரு ஃபன் பாட்டி. நீ ஒண்ணும் கண்டுக்காத..என்பார்கள்!

15,20 நாள் ஆட்டம் போட்டுவிட்டு போகவே மனமில்லாமல் கிளம்புவார்கள்! எனக்கு அவர்களோடு நாள் முழுதும் வேலை இருந்தாலும், அவர்கள் சென்றதும் வீடு வெறிச்சென்று ஆகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியிலிருந்தே எப்பொழுது பரீட்சை முடியும். எப்ப எங்கள் வீட்டுக்கு வரலாம் என்று நாட்களை எண்ண ஆரம்பித்து விடுவார்
கள்..நாங்களும் கூட அந்த மகிழ்ச்சிக்காக காத்திருப்போம்!

இப்ப தினமும் ஃபோன் பண்ணி...பாட்டி இங்க ரொம்ப போர். அங்க வரமுடியாம இந்தக் கொரானோ வந்துடுத்தே. அது மட்டும் என் கைல கிடைச்சா கொலை பண்ணிடு
வேன்..என்கிறான் எட்டாவது படிக்கும் என் பேரன்!

இவர்களுடன் என்ஜாய் பண்ணுவதை மிஸ் பண்ணுவதோடு இந்த வருடம் நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுவது வெளிநாட்டு பிள்ளைகள் வீட்டிற்குப் போக முடியாமல் போனதுதான். உள்ளூர் குழந்தைகளை அவ்வப்போது சென்று பார்க்கலாம். வெளிநாட்டுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே போக முடியும்.

என் இரண்டு பிள்ளைகள் லண்டனிலும் பெர்லினிலும் இருப்பதால் இருவர் வீட்டுலுமாக ஐந்தாறு மாதங்கள் இருந்துவிட்டு வர பிப்ரவரியிலேயே விஸா apply செய்திருந்தோம். அத்துடன் அங்கு ஈஸ்டர் விடுமுறையில் எல்லோருமாக போய் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என ஏகப்பட்ட ப்ளான்! அங்கெல்லாம் வசந்த காலம் குளிர் குறைந்து நன்றாக இருக்கும்.நம்மூர் கோடைக்காலத்திலிருந்து தப்பித்து அங்கு பறக்க எண்ணியிருந்தோம்! கொரோனாவால் விஸா கிடைக்காமல் எல்லாம் கேன்சல். கொரோனா பிரச்னை தீர இன்னும் எத்தனை நாளாகுமோ?

பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் பார்க்க மிகமிக ஆவலாக இருந்த எங்களுக்கு ஏமாற்றம். குழந்தைகளோ
...கொரானோ சரியானதும் கண்டிப்பா வந்துடு பாட்டி...என்கிறார்கள்.இனி அடுத்த வருடம்தான் வர முடியும் என்றதும்  லண்டனில் இருக்கும் என் குட்டிப் பேத்தி..we miss u very much thatha patti. Come soon..என்று சொன்னதைப் பார்க்க பாவமாக இருக்கிறது. அவர்களோடு தினமும் வீடியோவில் நேரில் பார்த்து பேசினாலும், கூட  இருந்து சந்தோஷமாக இருக்கும் சுகம் தனிதான். ஆனாலும் அந்நாட்களைப் போலின்றி இப்பொழுது எவரிடமும் நேரே பார்ப்பதுபோல் பார்த்து பேசி சந்தோஷமடைகிறோமே..
அது ஒரு வரம்தான். அந்த வசதி இருப்பதை நினைத்து சந்தோஷப் படுகிறேன்.

பெண் பிள்ளைகளைப் பார்ப்பதும் அவர்களோடு இருப்பதும் சந்தோஷம் என்றாலும் அவர்கள் வாரிசுகளிடம் நமக்கு இருக்கும் பாசம் தனிதான். நம் குழந்தைகளிடம்
காட்டும் கண்டிப்பை பேரன் பேத்திகளிடம் காட்ட முடியாது.

ஐஸ்கிரீமோ ஆனியன் பக்கோடாவோ குச்சி மிட்டாயோ...தம் பெற்றோர் வாங்கித்தர மறுப்பதை நம்மிடம் கேட்கும்போது நம்மால் மறுக்க முடிவதில்லையே!  இனி அந்தக் குழந்தைகளோடு நேரம் செலவிடவும் ‌அவர்களுக்கு சரியாக விளையாடவும்  சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் வருத்தமாக உள்ளது.Really we miss them very much🙁

No comments:

Post a Comment