Wednesday 13 May 2020

நன்றி..நன்றி🙏🏼..16.4.2020


ஆஹா..என் ஆத்துக்காரர் கறிகாய் நறுக்கி🥕🍠🥒 பாத்திரம் தேய்க்கற🥄🍴 பதிவுக்கு POTW. நானும்தான் தேய்க்கறேனே..எனக்கு யார் அவார்ட் கொடுக்கறா..🙁

என்னாச்சு..நீயே என்னமோ பேசறயே? மத்யமர்ல எழுத ஆரம்பிச்சப்பறம் நீ அப்பப்ப ஏதோ யோசிக்கறேன்னு🤔 ஸைலண்ட்டாதான் ஆயிடுவ. இன்னிக்கு என்ன புலம்பல்?😣

சொல்றேன். நாலு நாள் முன்னால நீங்க காய்கறி நறுக்கும்போது பாத்திரம் தேய்க்கும் போதல்லாம் வீடியோ📱 எடுத்தேனே..நீங்க சந்தோஷமா போஸ்😊 கொடுத்து குழந்தைகளுக்கு அனுப்ப சொன்னேளே..!!

ஆமாம். அதுக்கென்ன இப்போ? அவாள்ளாம் ஏதாவது கமெண்ட் அடிச்சாளா?😉

அதை நான் மத்யமர்ல போட்டுட்டேன்! 😜

அட ராமா! என்கிட்ட சொல்லவே இல்ல. எல்லாரும் கிண்டல் பண்ணினாளா?🤨

அதெல்லாம் இல்ல. ஆனாலும் உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட் Ramachandran Krishnamohan மாதிரி வெண்ணெய்🍜கடையத் தெரியல. எவ்வளவு அழகா அவர் கடையறார். இனி அந்த வேலையும் உங்களுக்கு!😄

என்னமோ போ! உனக்குதான வேலை செய்யறேன். பரவால்ல. அந்த பதிவுக்கு நிறைய கமெண்ட் 📑 வந்ததா?

ஓ.. வந்தது. அதுக்கு POTW கிடைச்சிருக்கு💃. ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு.😍

சந்தோஷம்தான உனக்கு?😊

இல்லையா பின்ன? கல்யாணநாளும்🥰 அதுவுமா உங்களால கிடைச்ச சூப்பர் கிஃப்டாச்சே இது🎀. மறக்க முடியாத ஸ்பெஷல் பரிசு💝. அப்றம்...

அப்றம் என்ன?🤨

வந்து...இந்த வெட்டிங் டேக்கு👩‍❤️‍👨 புடவையே வாங்கலயே..அதனால கொரோனா போனப்பறம் கடைக்கு போய் ஸிம்பிளா 5000 ரூபாய்க்கு ஒரு பட்டு புடவை வாங்கிக் கொடுக்கறேள்...உங்களுக்கு
பிடிச்ச கதர் சட்டை👕 நான் வாங்கித் தரேன். ஓகேவா?

உனக்கு பட்டுப் புடவை☺️..எனக்கு கதர் சட்டை🤭..நான் மாட்டேன்னு சொன்னா விடவா போற நீ! உன்னை சுத்தி சுத்திதான💞 நான் வந்தாகணும். டபுள் ஓ.கே🤗!!

தேங்க்யூ ஸோமச் டியர் பெட்டர் ஹாஃப் 🤩 இன்னிக்கு இந்த சந்தோஷத்தை ஸெலிபரேட்💃 பண்ண உங்களுக்கு பிடிச்ச ஹல்வா🍲 பண்ணித்தரேன்💖.

பின் குறிப்பு..
இதுவரை நான் பல பதிவுகளுக்கு POTW வாங்கியிருந்தாலும் இம்முறை என் மணநாள் அன்று எழுதிய பதிவிற்கு...அத்துடன் என் கணவரின் பங்கும் இடம் பெற்ற பதிவுக்கு கிடைத்தது பல மடங்கு மகிழ்ச்சியைத் தந்தது..எனக்கு மட்டுமல்ல..என் அன்புக் கணவருக்கும்..🙏🏼

என் பதிவைப் படித்து பாராட்டி லைக், கமெண்ட்டிட்ட மத்யம நண்பர்களுக்கும்🙏🏼, என் பதிவிற்கு POTW கொடுத்த அட்மின் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼
என் பதிவுக்கான லிங்க்..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1359845004203310/

No comments:

Post a Comment