Wednesday 5 August 2020

படத்துக்கு கவிதை..(25.7.2020)




அன்னையும் பிள்ளையும்👩‍👦

அன்னை...
கண்ணே..கண்மணியே..கட்டிக் கரும்பே..
அம்மா..அம்மா..என்றே
பிஞ்சு மொழியில் பிதற்றும் என் செல்லமே...
அகிலத்து செல்வமெல்லாம்
அள்ளி வந்து கொடுத்தாலும் உன் கிள்ளை மொழிக்கு ஈடுண்டோ...
என்னையே மறந்தேன் நான் நீயே என் உலகானாய் தங்கமே...

பிள்ளை..
கோடி பஞ்சணை போட்டாலும்
அம்மா உன் மடிசுகம் அது தருமோ?
வாய் நிறைந்த முத்துச் சிரிப்பு வேறெங்கும் காண்பேனோ..
அகத்தின் மகிழ்ச்சி உன் பரவச முகப்பூரிப்பு..
உன் இதமான அணைப்பில் அடைக்கலமானேன்..
அளவிலா ஆனந்தம் பெறுவதும்
உன்னால்தானே அம்மா !

அன்னை..
என் மடியே உன் தொட்டில்..
என் தோளே உன் தூளி..
உன் பிஞ்சு முகம் காண
சோதனையும் வேதனையும்
காற்றாக பறந்திடுமே..
என் உயிரின் நாதமே..
பசியும்கூட மறந்திடுவேன் உன் பால்முகம் கண்டு நான்..

உன் கள்ளப் புன்னகையில் என் உள்ளம் குளிர்ந்ததய்யா..
அம்மா என்று அழைத்தாலே என் மேனி சிலிர்க்குதய்யா..

பிள்ளை
எனைக்காக்கும் இன்னுயிரே..
உன் ஆசை முத்தங்கள் என் சொத்துக்கள்..
நீயில்லையேல் நானில்லை..
நின் அன்புக்கு எல்லை இல்லவே இல்லை..

தாயே உன் கண்ணில் எனைக் காண்கிறேன்..
என் கண்ணில் உனை வைத்துக் காப்பேன்...
உன் விழி திறந்து என்னுடன் விளையாடம்மா..

No comments:

Post a Comment